வகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் செருப்பால் அடித்த கல்லூரி மாணவி வைரல் வீடியோ
வகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் பேராசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி வைரல் வீடியோ
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ரகு இன்ஜினியரிங் கல்லூரியில், ஒரு மாணவி தனது பேராசிரியர் மீது செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் சிவில் பிரிவின் HOD ஆக பணியாற்றும் பேராசிரியர், வகுப்பின் போது மாணவிகள் சிலர் செல்போன் பயன்படுத்துவதை கவனித்து, அந்த மாணவியின் கைபேசியை பறித்தார். இதனை எதிர்த்த மாணவி, வகுப்புக்கு பிறகு பேராசிரியரிடம் தகராறில் ஈடுபட்டு, மிகுந்த ஆவேசத்தில் பேசினாராம். அதன் பின், திடீரென தன் செருப்பை எடுத்து, பேராசிரியரை அடித்து தாக்கியுள்ளார்.
இது அங்கிருந்த மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டது.இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/Andhraa_News/status/1914607677000519731
Tags: இந்திய செய்திகள்