மெரினா கடற்கரை செல்ல கட்டணம் என பரவும் தகவல் - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
மெரினா கடற்கரை செல்ல கட்டணம் என பரவும் தகவல் - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
பரவும் தகவல்:-
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள ஒரு சிறிய பகுதிக்கு, பொதுமக்கள் இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற புதிய விதி விரைவில் அமலாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்
மெரினா கடற்கரை செல்லக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் தவறானது. நீல கொடி கடற்கரைத் திட்டத்தின் கீழ் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. சென்னை மாநகராட்சியே கடற்கரைப் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தைச் செலுத்தும்." என்று சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார்
Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி