Breaking News

ஆம்ஸ்ட்ராங் மனைவி கட்சி பதவியில் இருந்து நீக்கம்! முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

ஆம்ஸ்ட்ராங் மனைவி கட்சி பதவியில் இருந்து நீக்கம்! முழு விவரம் இதோ


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், வழக்கறிஞர் அருள், சிவசக்தி, ஹரிஹரன், மலர்க்கொடி, அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், ரவுடி நாகேந்திரன் , ரவுடி புதூர் அப்பு , சீசிங் ராஜா உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேருக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து அவரது மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். 

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இனி கட்சி பதவிகளில் ஈடுபட மாட்டார் என்றும் கட்சி தலைமை அறிவித்துள்ளது. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தையையும் குடும்பத்தையும் மட்டுமே இனி கவனித்துக் கொள்வார். தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback