அமைச்சர் பொன்முடி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வனத்துறை அமைச்சர் பொன்முடி நீக்கம்
தமிழக வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி விலைமாதர்கள் பற்றிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசியது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது கட்சி நடவடிக்கை பாய்ந்துள்ளது. வழக்கமாக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தான் கட்சி நடவடிக்கை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார்
ஆனால் தற்போது பொன்முடி கழக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பெயரிலேயே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள்