உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாகவே சீர்குலைந்துவிட்டது - உச்சநீதிமன்றம்
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாகவே சீர்குலைந்துவிட்டது - உச்சநீதிமன்றம்
கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்னையை றம் கிரிமினல் வழக்காக மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு காட்டம். இந்த நடைமுறை தவறு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியும் மீண்டும் இதையே செய்வதா? என கண்டனம்
உ.பி. நொய்டாவைச் சேர்ந்த தேபு சிங், தீபக் சிங் இருவர் மீதான சிவில் வழக்கை நொய்டா போலீசார் குற்ற வழக்காகப் பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு நொய்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தங்கள் மீதான நொய்டா நீதிமன்றத்தில் நடைபெற்றும் குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாகவே சீர்குலைந்துவிட்டது. சாதாரணமான சிவில் வழக்குகளைக் கூட குற்ற வழக்குகளாக மாற்றுகின்றனர். பணம் திருப்பித் தரவில்லை என்பது குற்றவழக்காக கருத முடியாது இந்த நடைமுறை தவறு.ஆகையால் இந்த வழக்கில் முதல் விசாரணை அதிகாரி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஏன் குற்ற வழக்காக பதிவு செய்தார்? என்பதை விளக்க வேண்டும்.
ஏற்கனவே தீர்ப்பு வழங்கியும் மீண்டும் இதையே செய்வதா? என கேள்வி எழுப்பியதுடன் கண்டனம் தெரிவித்தார். மேலும், நொய்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
Tags: இந்திய செய்திகள்