Breaking News

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக் சட்டப்பேராவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்தனர். வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு நிச்சயம் போராடும் - வெற்றியும் பெறும். வக்பு சட்டத்திருத்தத்தை மக்களவையில் நிறைவேற்றியதை கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நள்ளிரவு 2 மணியளவில் வக்பு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளார்கள் என கூறினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback