Breaking News

தமிழக மின்சார வாரியம் சார்பாக பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 05.04.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் மின் நுகர்வோர் & பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள்.



இது குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 05.04.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் மின் நுகர்வோர் & பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள்

மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள். குறைந்த மின்னழுத்தம். சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள். குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.

மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback