Breaking News

உத்தரப் பிரதேசத்தில் மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

உத்தரப் பிரதேசத்தில் மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர் முழு விவரம்



உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதியில் ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறியதால் பதற்றம் நிலவியது.

இந்துக்களின் பண்டிகையான ராம நவமி நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. 

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பல இடங்களில் ராம நவமி கொண்டாடப்பட்ட நிலையில், சிக்கந்தரா பகுதியில் இருக்கும் சையத் சலார் காசி தர்காவில் நேற்று ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் பேரணி சென்ற ஹிந்து அமைப்பினர் திடீரென தர்காவின் மீது ஏறி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கத்தியபடியே கொடிகளை அங்கு கட்ட முயன்றுள்ளனர். மேலும், தர்காவுடன் கூடிய அந்த மசூதியை இடித்து கோவில் கட்டவேண்டும் என்றும் கூறி கோஷமிட்டுள்ளனர்.

இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததை அடுத்து ஹிந்து அமைப்பினரை தர்காவில் இருந்து வெளியேற்றினர்.

இது தொடர்பாக, சிக்கந்தரா பகுதியின் கூடுதல் டிசிபி புஷ்கர் வர்மா விசாரணை நடத்தி 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், காவி கொடி ஏற்றிய கும்பலுக்கு தலைமை வகித்ததாக மான்வேந்தர் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இவர் மஹராஜா சுஹல்தேவ் சம்மான் சுரக்ஷா மஞ்ச் எனும் இந்துத்துவா அமைப்பின் தலைவர் ஆவார் மேலும் 20 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் பணியில் அலட்சியம் காட்டியதாக பஹரியா காவல் நிலையத்தினர் மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் காவல் நிலையப் பொறுப்பாளரான துணை ஆய்வாளர் ரவி கட்டியார், கான்ஸ்டபிள்களான அன்ஷு குமார் மற்றும் சுனில் குமார் யாதவ் ஆகியோர் அடங்குவர்.

News Source:-

https://www.siasat.com/up-ram-navami-devotees-climb-mosque-wave-saffron-flags-3203988/

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback