Grindr ஆப்பை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கோரிக்கை
அட்மின் மீடியா
0
Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம்.
சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் டேட்டிங் செயலியாக உள்ள கிரிண்டர் மொபைல் ஆப்பை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
போதைப்பொருள் விற்பனைக்கு கிரிண்டர் ஆப் அதிகம் பயன்படுத்தப்படுகிறது மேலும் போதைப்பொருள் கும்பலுக்கான முக்கிய தொடர்பு சாதனமாக கிரிண்டர் ஆப் பயன்படுத்தப்படுவது விசாரணையில் அம்பலமாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்படும் 10 பேரில் குறைந்தது 5 பேர் கிரைண்டர் ஆப் மூலம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்