Breaking News

ரயில்வே தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம் என பரவும் செய்தி IRCTC அளித்த விளக்கம்

அட்மின் மீடியா
0

ரயில்வே தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம் என பரவும் செய்தி IRCTC அளித்த விளக்கம்

தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெரிவித்துள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் மற்றும் பிரீமியம் தக்கல் என இரண்டு வசதிகள் உள்ளன.பிரீமியம் தக்கலுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

ரெயில்களில் உடனடியாக பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தட்கல் முறை கடைபிடிக்கப்படுகிறது. பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது நாளை பயணம் மேற்கொள்ள இன்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்

ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்வதற்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.  இந்நிலையில் தக்கல் மற்றும் பிரீமியர் தக்கலுக்கு வெவ்வேறு நேரமாக மாற்றப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

IRCTC எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்பட்டதில்லை. தற்போதைய முன்பதிவு நேரங்கள் மாறாமல் தொடருகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/IRCTCofficial/status/1910660638730248524

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback