Breaking News

நித்தியானந்தா உயிருடன் உள்ளாரா? இறந்துவிட்டாரா? ரீ எண்ட்ரி ஆகி அளித்த விளக்கம் nithyananda dead or alive

அட்மின் மீடியா
0

நித்தியானந்தா உயிருடன் உள்ளாரா? இறந்துவிட்டாரா? ரீ எண்ட்ரி ஆகி கைலாசா அளித்த விளக்கம்

கைலாசாவில் வசித்துவருவதாக சொல்லப்படும் பிரபல சாமியார் நித்தியானந்தா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக நித்தியானந்தா சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலமாக ஆன்மீக சொற்பொழிவில் தகவல் தெரிவித்த‌தாக கூறப்படுகிறது. 

நித்தியானந்தாவின் மரணம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. இந்தியாவில் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து தப்பிக்க, இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம் என்று செய்தி பரவிய நிலையில்கைலாசா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

கைலாசாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட என்ட்ரி கொடுத்துள்ளார் . அந்த வீடியோவில் நான் வீழ்வேன் என நினைத்தாயோ? என்று தலைப்பிட்டு,

குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். இந்து எதிரிகள், வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடித்து வருகின்றனர். “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். இப்படியே பண்ணா என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன் பாத்துக்கோங்க”என பேசியுள்ளார்.

மற்றொரு வீடியோவில், நான் உயிரோடுதான் இருக்கேனா, இல்லையா? ஒரு முடிவுக்கு வாங்கப்பா, என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க. நான் இறந்துவிட்டதாக சிலர் வீடியோ வெளியிட்டுள்ளனர். 3 மாதங்களில் 4,000 வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதை நான் எப்போது பார்த்து முடிப்பது? இப்போது எனக்கே சந்தேகமா தான் இருக்கு உயிரோடு இருக்கேனா இல்லையா என்று… எதாவது ஒரு முடிவுக்கு வாங்க” என குறிப்பிட்டுள்ளார். 

நித்யானந்தா இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், ஏப்ரல் 2ம் தேதி இரவு 7 மணிக்கு பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார் என அறிவிக்கப்படுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/SriNithyananda

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback