Breaking News

பிரதமர் மோடி வருகையால் பாம்பன் பள்ளிவாசல் மினாரா தார்ப்பாய் மூடப்பட்டதா ? உண்மை என்ன முழு விவரம் Pamban Mosque

அட்மின் மீடியா
0
மோடி வருகையை ஒட்டி பாம்பன் பள்ளிவாசல் மினாரா தார்ப்பாய் மூடப்பட்டதா ? உண்மை என்ன முழு விவரம்

பாம்பன் பள்ளிவாசல் மினாரா தார்ப்பாய் அகற்றம்… நடந்தது என்ன காவல்துறை அளித்த விளக்கம் முழு விவரம்





பரவிய செய்தி:-

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகையை ஒட்டி பாம்பன் பள்ளிவாசல் மினாராவில் தார்ப்பாய் போட்டு மறைக்கும் பணியை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே அந்த மினாராவில் அல்லாஹு அக்பர் என்று பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தை நீக்க வேண்டும் என கூறிய மாவட்ட காவல்துறை அதற்காக ஏதேதோ காரணங்களை சொல்லி வந்தது. ஆனால் இப்போது பூனைக்குட்டி வெளியில் வந்துள்ளது. 

பாஜகவை திருப்திப்படுத்தும் நோக்கில் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் 'இஸ்லாமிய வெறுப்பு' செயல் திட்டம் தான் இதன் பின்னணியில் உள்ளது என்பது தெளிவாகிவிட்டது. 

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி பாம்பன் பள்ளிவாசல் மினாராவையும் அதில் பொறிக்கப்பட்டு இருக்கும் அல்லாஹு அக்பர் என்ற வாசகத்தையும் பார்க்கட்டுமே ..?  பாம்பன் தீவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று பார்த்து வெட்கி தலை குனியட்டுமே.? 
இதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சனை.? இது தமிழ்நாடா அல்லது அல்லது பாஜக ஆளும் மாநிலமா என்று புரியாத அளவிற்கு திராவிட மாடல் திமுக ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கிறது.

உண்மை என்ன :-

பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது.

தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது - காவல்துறை விளக்கம்

இதுதொடர்பாக மண்டபம் காவல் ஆய்வாளர் சரிதாபானு கடந்த மார்ச் 16-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில்,

பாம்பன் ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில் 31.03.2025-ம் தேதி நோன்பு பெருவிழாவை முன்னிட்டு பள்ளிவாசல் கோபுர மினாராவில் அலங்கார விளக்கு பலகை ஏற்றப்பட்டுள்ளது. அந்த அலங்கார விளக்கு பலகையானது மினாராவின் சுமார் 50 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அலங்கார விளக்கு பலகையினை இவ்வளவு உயரத்தில் வைப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனுமதியினை பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் அதிகமான உயரத்தில் இந்த விளம்பர பலகையை அமைத்திருப்பது சட்ட விதிமீறலாகும்.

மேலும் இந்த பள்ளிவாசல் மினாரா அமைந்திருக்கும் பகுதியானது பாம்பன் மேற்கு வடக்கு, தெற்கு, கடற்கரைக்கு மிக அருகில் உள்ளதால் சுமார் 1/2 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து பார்க்கும்போது அந்த விளம்பர பலகையின் தோற்றம் ஒரே விளக்காகவும் கலங்கரை விளக்கின் தோற்றத்தைப் போலவும் தோற்றமளிக்கிறது.

அதனால் அதிகமான மீன்பிடி படகுகளும், கப்பல் போக்குவரத்தும், நாட்டுப்படகுகளும் சென்று வரக்கூடிய பகுதியில் படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கு (Nevigation Problem ) மிகவும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் இருந்து விபத்து ஏற்படக்கூடிய வகையிலும் அமைந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன் அனுமதி பெற்று இந்த அலங்கார மின்விளக்கு பலகையினை வைத்துகொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகைக்கும், இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback