தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Sathunavu Amaipalar Recruitment 2025
தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம்.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும்
பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு கால முறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். நியனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ குள் இருக்க வேண்டும். (ஊராட்சி -குக்கிராமம் வருவாய்கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை)
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / மாநகராட்சி / நகராட்சி அலுவலகத்தில் பெற்று மட்டுமே விண்ணப்பிக்க இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள்
சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3000 வழங்கப்படும். ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு கால முறை ஊதியத்தில் (ஊதியநிலை (Level of Pay ரூ. 3000.9000) ஊதியம் வழங்கப்படும்.
நியனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ குள் இருக்க வேண்டும். (ஊராட்சி குக்கிராமம். வருவாய்கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை)
விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 16 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியான 11.04.2025 தேதியினை அடிப்படையாகக் கொண்டுகணக்கிடப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு உரிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். குறைவான பார்வைத் திறன் (மூக்குக் கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது) உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளின் முழு செயல்பாட்டுதிறன். உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடங்கியது. திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல்திறன் குறைபாடு (மிதமான) இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் 29. 04. 2026 தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், பத்தாம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். குடும்ப அட்டை இருப்பிடச்சான்று ஆதார் அட்டை சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும் விதவை கணவரால் கைவிடப்பட்டோர். மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் போன்ற அனைத்து சான்று நகல்களிலும் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். சான்றுகள் அனைத்தும் நேர்முக தேர்வின் போது அசல் சான்றிதழ்கள் காண்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தபால் அஞ்சல் மூலம் சம்மத்தப்பட்ட வட்டார வளர்ச்சி நகராட்சி! மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பும்போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பாகாது
நீங்கள் எந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டுமோ அந்த மாவட்டத்தை செலக்ட் செய்து அதில் அறிவிப்பு அல்லது Notices என்பதை கிளிக் செய்து அதில் recruitment அல்லது ஆட்சேர்ப்பு என்பதை கிளிக் செய்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பனையை டவுன்லோடு செய்து கொள்ளவும்
Ariyalur.nic.in
Chengalpattu.nic.in
Chennai.nic.in
Coimbatore.nic.in
Cuddalore.nic.in
Dharmapuri.nic.in
Dindigul.nic.in
Erode.nic.in
Kallakurichi.nic.in
Kancheepuram.nic.in
Kanniyakumari.nic.in
Karur.nic.in.nic.in
Krishnagiri.nic.in
Madurai.nic.in
Mayiladuthurai.nic.in
Nagapattinam.nic.in
Namakkal.nic.in
Perambalur.nic.in
Pudukkottai.nic.in
Ramanathapuram.nic.in
Ranipet.nic.in
Salem.nic.in
Sivaganga.nic.in
Tenkasi.nic.in
Thanjavur.nic.in
Theni.nic.in
The Nilgiris.nic.in
Thoothukudi.nic.in
Tiruchirappalli.nic.in
Tirunelveli.nic.in
Tirupathur.nic.in
Tiruppur.nic.in
Tiruvallur.nic.in
Tiruvannamalai.nic.in
Tiruvarur.nic.in
Vellore.nic.in
Viluppuram.nic.in
Virudhunagar.nic.in
Tags: வேலைவாய்ப்பு