Breaking News

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக SDPI கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக SDPI கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து முதல் கட்சியாக SDPI அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது, 

பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள். தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். இதுதான் பாஜகவின் நிலைப்பாடு.

எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது.

அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை இந்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பாஜக தவம் கிடந்தார்கள். இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது மேலும் இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback