Breaking News

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைப்பு.. பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு நடந்தது என்ன முழு விவரம் இதோ singapore election 2025

அட்மின் மீடியா
0

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைப்பு.. பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு நடந்தது என்ன முழு விவரம் இதோ

சிங்கப்பூர் அதன் அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறையை முறையாகத் தொடங்கிவைக்கும் வகையில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நாடாளுமன்றத்தைக் கலைத்tஹு உத்தரவிட்டுள்ளார்




நாடாளுமன்றம் கலைப்பு:-

சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. வரும் 23ஆம் தேதி (புதன்கிழமை) வேட்பு மனுத் தாக்கல் தினம் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.அதிபர் தர்மன் சண்முகரத்னம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரின் 14ஆவது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் நடைபெறவிருக்கும் முதல் தேர்தல் இது.சென்ற ஆண்டு மே மாதம் திரு வோங், பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டப்படி, அமைச்சர்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பதவி துறக்கவேண்டியதில்லை. அவர்கள் தொடர்ந்து பொறுப்புகளை வகிப்பர்.

தேர்தல் அறிவிப்பு:-

சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி (சனிக்கிழமை) பொதுத்தேர்தல் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்

மேலும் இம்மாதம் 23ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுத் தாக்கல் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி:-

இந்தத் தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் அதிகாரியாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு ஹான் கோக் ஜுவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள நிலவரம்:-

1965 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (PAP) ஆட்சி ஆட்சியில் உள்ளது. 

கடந்த 2020 இல் நடந்த தேர்தலில் PAP கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த்தாலும் அதன் வாக்கு வங்கி முன்பு எப்போதும் இல்லாததை விட 61 சதவீதம் ஆக சரிந்தது.

மொத்தம் உள்ள 93 இடங்களில் 83 இடங்களில் PAP வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தாலும், எதிர்கட்சியான தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6 இல் இருந்து 10 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேண்டி இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மே 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஏப்ரல் 23 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தல், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-வது பொதுத்தேர்தல் ஆகும். இந்த தேர்தலிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

விடுமுறை:-

பொதுத் தேர்தல் வாக்களிப்பு நாளான சனிக்கிழமை, மே 3ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்க அறிவுறுத்தப்படுவதாக மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது

Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback