கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத்திருத்த மசோதா The Waqf (Amendment) Bill
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது The Waqf (Amendment) Bill
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்க்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர்.
மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. நள்ளிரவு 2 மணிக்கு வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது
வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வந்தது.
ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் மற்றும் இந்தியா கூட்டணியின் வெளிநடப்பு இருந்தபோதிலும் நடைபெற்ற விவாதங்களுக்கு பின்னர் மசோதா மீதான வாக்கெடுப்பு தொடங்கியது.இறுதியில் மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பெற்று, மசோதா நிறைவேற்றப்பட்டது.
வக்ஃப் திருத்தம் மசோதாவில் கொண்டுவந்துள்ள முக்கிய திருத்தம்
வக்ஃப் என அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இனி வக்ஃப் சொத்துக்களாக கருதப்படாது வக்ஃப் திருத்தம் மசோதாவில் அரசு கொண்டுவந்துள்ள முக்கிய திருத்தம்
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்